இந்தியாவின் ஆதிக்கம் தொடருமா? வெஸ்ட் இண்டீஸ் உடன் இன்று 2வது டி20 போட்டி

இந்தியாவின் ஆதிக்கம் தொடருமா? வெஸ்ட் இண்டீஸ் உடன் இன்று 2வது டி20 போட்டி

இந்தியாவின் ஆதிக்கம் தொடருமா? வெஸ்ட் இண்டீஸ் உடன் இன்று 2வது டி20 போட்டி
Published on

இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 2வது டி20 போட்டி, பாஸெட்டர் வார்னர் பார்க் மைதானத்தில் இன்று இரவு 8.00 மணிக்கு தொடங்குகிறது.

வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் முதல் ஆட்டத்தில் இந்தியா 68 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டி20 போட்டி பாஸெட்டரேவில் உள்ள வார்னர் பார்க் மைதானத்தில் இன்று இரவு 8.00 மணிக்கு நடக்கிறது.

முதலாவது ஆட்டத்தில் 190 ரன்கள் குவித்து எதிரணியை 122 ரன்களில் மடக்கிய ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி அதே உத்வேகத்துடன் இன்றைய ஆட்டத்திலும் வாகை சூடி ஆதிக்கத்தை தொடர தீவிரம் காட்டும். அதேவேளையில் இந்தியாவை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்ய முனைப்பு காட்டி வருகிறது வெஸ்ட் இண்டீஸ் அணி. எனவே இந்த ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது.

இதையும் படிக்க: ‘முதல் முயற்சியிலேயே 136 கிலோ எடை’.. காமன்வெல்த்தில் தங்கம் வென்ற 19 வயது இந்திய இளைஞர்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com