\
IND vs WI: 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி: தொடரை கைப்பற்றியது இந்தியா

IND vs WI: 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி: தொடரை கைப்பற்றியது இந்தியா

IND vs WI: 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி: தொடரை கைப்பற்றியது இந்தியா
Published on

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, த்ரில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது.

போர்ட் ஆப் ஸ்பெயினில் நடைபெற்ற 2வது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் பேட் செய்தது. தொடக்க வீரராக களமிறங்கிய சாய் ஹோப், தனது 100ஆவது போட்டியில் சதமடித்து அசத்தினார். மத்திய வரிசையில் கேப்டன் நிக்கோலஸ் பூரன் 74 ரன்கள் சேர்த்தார். 50 ஓவர்களில் மேற்கிந்திய தீவுகள் அணி, 6 விக்கெட் இழப்பிற்கு 311 ரன்கள் குவித்தது. ஷர்துல் தாக்கூர் 3 விக்கெட்களை வீழ்த்தினார்.     

கடின இலக்கை நோக்கிக் களமிறங்கிய இந்திய அணியில், கேப்டன் தவான் 13 ரன்களில் ஏமாற்றம் அளித்தார். கில் 43 ரன்களிலும், சூர்யகுமார் 9 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பின்னர் ஸ்ரேயாஷ் அய்யர், சஞ்சு சாம்சன் அரைசதம் அடித்து நம்பிக்கை அளித்தனர். இறுதிக்கட்டத்தில் ஆல்ரவுண்டர் அக்ஸார் படேலும், அதிரடியாக விளையாடி தனது முதல் அரைசதத்தைப் பதிவு செய்தார். அவர் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 35 பந்துகளில், 64 ரன்கள் விளாசினார். 8 விக்கெட்களை இழந்த நிலையில் இந்திய அணி, கடைசி ஓவரில் த்ரில் வெற்றி பெற்றது. 3 போட்டிகள் கொண்ட தொடரை இரண்டுக்கு - பூஜ்ஜியம் என்ற கணக்கில் கைப்பற்றியது.

இதையும் படிக்கலாம்: தங்கப் பதக்கம் மீதான தாகம் இன்னும் தொடர்கிறது - வரலாற்று சாதனை படைத்த நீரஜ் சோப்ரா பேட்டி

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com