\
கோலி, தோனி அரை சதம் - 268 ரன்கள் சேர்த்த இந்தியா

கோலி, தோனி அரை சதம் - 268 ரன்கள் சேர்த்த இந்தியா

கோலி, தோனி அரை சதம் - 268 ரன்கள் சேர்த்த இந்தியா
Published on

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி 268 ரன்கள் சேர்த்துள்ளது.

உலகக் கோப்பை தொடரின் 34வது லீக் போட்டி இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையே நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணி  தொடக்க ஆட்டக்காரர் ரோகித் ஷர்மா 18 (23) ரன்களில் விக்கெட்டை இழந்தார். அதன்பின்னர் ஜோடி சேர்ந்த ராகுல் மற்றும் கேப்டன் கோலி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். 48 (64) ரன்கள் எடுத்து அவுட்டாகி அரை சதத்தை தவறவிட்டார் ராகுல்.

பின்னர் வந்த விஜய் சங்கர் 14 (19) ரன்களில் விக்கெட்டை இழக்க, கேதர் ஜாதவ் 7 (10) ஆட்டமிழந்தார். அதைத்தொடர்ந்து விராட் கோலி 72 (82) ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். அதன்பின்னர் ஜோடி சேர்ந்த தோனி மற்றும் ஹர்திக் பாண்ட்யா பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். 38 பந்துகளில் 46 ரன்களை குவித்திருந்தபோது ஹர்திக் அவுட் ஆக, இறுதி வரை விளையாடிய தோனி 56 (61) ரன்கள் எடுத்தார். 50 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 268 ரன்கள் சேர்த்தது. வெஸ்ட் இண்டீஸ் அணியில் சிறப்பாக பந்துவீசிய கேமர் ரோச் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com