இந்தியா டாஸ் வென்று முதல் பேட்டிங்

இந்தியா டாஸ் வென்று முதல் பேட்டிங்

இந்தியா டாஸ் வென்று முதல் பேட்டிங்
Published on

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி டாஸ் வென்றது.

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான கிரிக்கெட் சுற்றுப்பயணம் அமெரிக்காவில் நடந்து வருகிறது. இதில் முதலில் டி20 தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த முதல் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்நிலையில் இன்று இரண்டாவது டி20 போட்டி ஃபுளோரிடாவில் நடைபெறுகிறது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்துவீசுகிறது. இன்றைய போட்டியில் இந்திய வென்றால் கோப்பை வெல்லும் என்பதால், அதற்கான முனைப்புடன் விளையாடும். அதேநேரம் வெஸ்ட் இண்டீஸ் அணியும் கோப்பை தக்க வைப்பதற்காக போராடும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com