\
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் முதல் ஒருநாள் போட்டி : மழையால் தாமதம்

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் முதல் ஒருநாள் போட்டி : மழையால் தாமதம்

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் முதல் ஒருநாள் போட்டி : மழையால் தாமதம்
Published on: 

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையேயான முதல் ஒருநாள் போட்டியில், டாஸ் போடுவது மழையால் தாமதம் ஆகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான சுற்றுப்பயணம் சென்றுள்ளது. அமெரிக்காவில் நடந்த இந்த கிரிக்கெட் சுற்றுப்பயணத்தில் டி20 தொடர் நிறைவடைந்துள்ளது. இதில் இந்திய அணி 3-0 என்ற கணக்கில் கோப்பையை வென்றுள்ளது. இந்நிலையில் இன்று முதல் ஒருநாள் போட்டி நடைபெறுகிறது. இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு போட்டி தொடங்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் மழையால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் போட்டி தொடங்குவதிலும் தாமதம் ஏற்படும். மைதனாத்தில் ஆங்காங்கே தண்ணீர் காணப்படுவதால் அவற்றை அகற்றும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com