கெத்து காட்டிய ஹெட்மேயர் ! இந்திய வெற்றி பெற 323 ரன்கள் இலக்கு

கெத்து காட்டிய ஹெட்மேயர் ! இந்திய வெற்றி பெற 323 ரன்கள் இலக்கு
கெத்து காட்டிய ஹெட்மேயர் ! இந்திய வெற்றி பெற 323 ரன்கள் இலக்கு

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றிப் பெற 323 ரன்களை இலக்காக
நிர்ணயிக்கப்பட்டுள்ளது.வெஸ்ட் இண்டீஸ்- இந்திய அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி கவுகாத்தியில் இன்று நடக்கிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்தியக் கேப்டன் விராட் கோலி முதலில் பவுலிங் செய்ய தீர்மானித்தார்.

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாட வந்துள்ளது. இரு அணிகளுக்கு
இடையிலான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றது. இதையடுத்து இரு அணிகளுக்கு
இடையே 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடர் நடத்தப்படுகிறது. இதன் முதல் போட்டி, அசாம் மாநிலம் கவுகாத்தியில் 1.30
மணிக்கு தொடங்கியது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக சந்திரபால் ஹேம்ராஜ் மற்றும் கெரோன் போவல் களமிறங்கனர்.


இதில் 9 ரன்களில் சந்திரபால் ஹேம்ராஜ் ஆட்டமிழந்தார். ஆனால், மறுமுனையில் போவல் மற்றும் ஹோப் சிறப்பாக
விளையாடினார்கள். இதில் ஹோப் 32 ரன்களில் ஆட்டமிழக்க, அடுத்து தனது 200 ஆவது போட்டியில் களமிறங்கிய மர்லான்
சாமுவேல்ஸ் டக் அவுட்டாகி வெளியேறினார். இதன் பின்பு ஹெட்மேயர் மற்றும் பவுல் ஜோடி பொறுமையாக விளையாடியது.
இதில் பவுல் 52 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் மறுமுனையில் ஹெட்மேயர் அதிரடியாக விளையாடி ரன்களை அடிக்க
தொடங்கினார். ஹெட்மேயருடன் இணைந்த வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டரும் ரன்களை சேர்க்க
தொடங்கினார்.

இந்திய பவுலர்களை விளாசித் தள்ளிய ஹெட்மேயர் 78 பந்துகளில் 106 ரன்களை சேர்த்த போது ஜடேஜா பந்துவீச்சில்
ஆட்டமிழந்தார். ஹெட்மேயர் மொத்தம் 6 பவுன்டரிகள் 6 சிக்ஸர்கள் என கெத்து காட்டினார். இதனையடுத்து கேப்டன் ஜேசன்
ஹோல்டர் 38 ரன்னில் ஆட்டமிழந்தார். பின்பு, நிதானமாகவும் அவ்வப்போது அதிரடி காட்டிய வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் 50
ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 322 ரன்களை குவித்தது. இந்திய அணியின் தரப்பில் சாஹல் 3 விக்கெட்டையும், ஷமி
மற்றும் ஜடேஜா தலா 2 விக்கெட்டையும் கைப்பற்றினர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com