வெளுத்து வாங்கிய வெஸ்ட் இண்டீஸ் ! 207 ரன்கள் குவிப்பு

வெளுத்து வாங்கிய வெஸ்ட் இண்டீஸ் ! 207 ரன்கள் குவிப்பு
வெளுத்து வாங்கிய வெஸ்ட் இண்டீஸ் ! 207 ரன்கள் குவிப்பு

இந்தியாவுக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஹெட்மயர் மற்றும் பொல்லார்டு அதிரடி ஆட்டத்தின் காரணமாக 207 ரன்கள் குவித்தது வெஸ்ட் இண்டீஸ் அணி.

இந்தியா வந்துள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக 3 டி20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்க உள்ளது. இந்த டி20 தொடரின் முதல் போட்டி இன்று ஹைதராபாத்தில் ராஜிவ்காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங்கை தொடங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் லெவிஸ் 17 பந்துகளில் 40 ரன்களை சேர்த்து அவுட்டானார். இதற்கு பிறகு களமிறங்கிய கிங் 31 ரன்களும், ஹெட்மயர் 56 ரன்களும் குவித்தனர். பின்னர் களமிறங்கிய பொல்லார்ட் தன் பங்குக்கு 37 ரன்களை குவித்தார்.

இந்திய அணியின் அனைத்து பந்து வீச்சாளர்களின் பந்துகளையும் வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் சிதறடித்தனர். இறுதியில், 5 விக்கெட் இழப்புக்கு 207 ரன்கள் குவித்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி ஒட்டுமொத்தமாக 15 சிக்ஸர்கள் விளாசியது. இந்திய பவுலர்களில் சாஹல் 2 விக்கெட்டை வீழ்த்தினார். சாஹர் அதிகபட்சமாக 4 ஓவர்களில் 56 ரன்கள் வாரி வழங்கினார். அதேபோல், வாஷிங்டன் சுந்தர் 3 ஓவரில் 34 ரன்கள் கொடுத்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com