2-வது ஒருநாள் போட்டி: இந்தியா முதலில் பேட்டிங்

2-வது ஒருநாள் போட்டி: இந்தியா முதலில் பேட்டிங்
2-வது ஒருநாள் போட்டி:  இந்தியா முதலில் பேட்டிங்

இன்று நடக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் விளையாடும் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

இந்தியா - மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான முதல் ஆட்டத்தில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றிருந்தது. இதன் மூலம் 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்தப் போட்டியில் இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இஷான் கிஷனுக்கு பதிலாக கே.எல்.ராகுல் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணியில் கேப்டன் பொல்லார்டுக்கு பதிலாக ஒடியன் ஸ்மித் சேர்க்கப்பட்டுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டனாக நிகோலஸ் பூரண் செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 2-வது ஆட்டத்தில் இன்று இரு அணிகளும் மீண்டும் மோதுகின்றன. இந்த ஆட்டம் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் தொடங்கியுள்ளது. இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பொல்லார்டு  முதலில் பந்து வீசுவதாக அறிவித்தார். அதன்படி ரோகித் சர்மா  தலைமையிலான இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. இந்த ஆட்டத்தில் வென்றால் 2-0 என தொடரை இந்தியா கைப்பற்றி விடும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com