IND vs WI: இரண்டாவது டி20-யில் வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங் தேர்வு!

IND vs WI: இரண்டாவது டி20-யில் வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங் தேர்வு!

IND vs WI: இரண்டாவது டி20-யில் வெஸ்ட் இண்டீஸ் அணி பவுலிங் தேர்வு!
Published on

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகின்றன. இந்த தொடர் கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த தொடரின் இரண்டாவது போட்டி இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பொல்லார்ட், பவுலிங் தேர்வு செய்துள்ளார். 

அதனால் இந்த போட்டியில் இந்தியா முதலில் பேட் செய்கிறது. முதல் போட்டியில் இந்தியா ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்ததது. ஒருநாள் தொடரையும் இந்தியா 3 - 0 என்ற கணக்கில் வென்றது குறிப்பிடத்தக்கது. 

ஆடும் லெவன் விவரம்... 

வெஸ்ட் இண்டீஸ்!

பிராண்டன் கிங், கைல் மேயர்ஸ், நிக்கோலஸ் பூரன் (விக்கெட் கீப்பர்), ரோவ்மேன் பவல், பொல்லார்ட் (கேப்டன்), ஜேசன் ஹோல்டர், ஒடியன் ஸ்மித், ரோஸ்டன் சேஸ், அகேல் ஹோசைன், ரொமாரியோ ஷெப்பர்ட், ஷெல்டன் காட்ரெல்

இந்தியா!

ரோகித் ஷர்மா (கேப்டன்), இஷான் கிஷன், விராட் கோலி, ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), சூர்யகுமார் யாதவ், வெங்கடேஷ் ஐயர், தீபக் சாஹர், புவனேஷ்வர் குமார், ஹர்ஷல் படேல், ரவி பிஷ்னோய், யுஸ்வேந்திர சாஹல். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com