இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் 3-வது ஒரு நாள் போட்டி மழையால் ரத்து!
இங்கிலாந்து- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒரு நாள் போட்டி, மழை காரணமாக கைவிடப்பட்டது.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கு இடையே, 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் போட்டித் தொடர் இப்போது நடந்து வருகிறது.
பிரிட்ஜ்டவுனில் நடந்த முதலாவது போட்டியில், இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. இரண்டாவது ஒரு நாள் போட்டியில் வெஸ்ட் இண் டீஸ் அணி, ஹெட்மையரின் சதத்தால் வெற்றி பெற்றது.
இதனால் ஐந்து போட்டிகள் கொண்ட தொடரில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் உள்ளன. இந்நிலையில் மூன்றாவது ஒரு நாள் போட்டி நேற்று நடப்பதாக இருந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, பந்து வீச்சை தேர்வு செய்திருந்தது. ஆனால், மழை தொடர்ந்து பெய்து கொண் டிருந்ததால் போட்டி கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதனால் வீரர்களும் ரசிகர்களும் ஏமாற்றமடைந்தனர். நான்காவது ஒரு நாள் போட்டி நாளை நடக்கிறது.