பிராவோவை கலாய்த்த கேப்டன் தோனி - பரபரப்பான நேரத்தில் மைதானத்தில் என்ன நடந்தது?

பிராவோவை கலாய்த்த கேப்டன் தோனி - பரபரப்பான நேரத்தில் மைதானத்தில் என்ன நடந்தது?

பிராவோவை கலாய்த்த கேப்டன் தோனி - பரபரப்பான நேரத்தில் மைதானத்தில் என்ன நடந்தது?
Published on

நவி மும்பையில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியின் 2-வது இன்னிங்சின் போது, வேகப்பந்து வீச்சாளரான பிராவோவை, கேப்டன் தோனி கலாய்த்த சம்பவத்தால் சிரிப்பலை எழுந்தது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்று வரும் நடப்பாண்டுக்கான 15-வது சீசன் ஐபிஎல் போட்டி, விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்கான சூப்பர் லீக் போட்டிகள் நிறைவடைய, ஒவ்வொரு அணிக்கும் இன்னும் ஒருசில போட்டிகளே உள்ளன. இதனால் ஒவ்வொரு அணியும் வெற்றி முனைப்பில் ஆடி வருகின்றன.

இதில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியும், 4 முறை கோப்பை வென்ற சென்னை அணியும் இந்த சீசனில் துவக்கம் முதல் சொதப்பி வந்த நிலையில், தற்போது ஓரளவு வெற்றி வாய்ப்பை பெற்று வருகின்றன. அந்தவகையில், நேற்று நவி மும்பையில் டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், ரிஷப் பந்த் தலைமையிலான டெல்லி அணியை எதிர்கொண்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 91 ரன்களில் வெற்றிபெற்று புள்ளிப்பட்டியில், 9-வது இடத்திலிருந்து 8-ம் இடத்திற்கு முன்னேறியது.

இந்நிலையில், சென்னை அணி 2-வது இன்னிங்சில் பீல்டிங் செய்தது. அப்போது, 17-வது ஓவரில், மஹீஷ் தீக்‌ஷணா வீசிய பந்தை எதிர்கொண்ட ஆண்ட்ரிக் நார்ட்ஜே கவர் திசை நோக்கி அடித்தார். ஆனால் அங்கு நின்றிருந்த பிராவோ மிக அற்புதமாக பந்தை தடுத்து நிறுத்தினார்.

இதையடுத்து கேப்டன் தோனி, அனைவரின் முன்பும் 'well done old man' எனக் கூறினார். 38 வயதான சீனியர் வீரர் என்பதாலும், சென்னை அணியில் மிக நீண்ட காலமாக இருப்பதால் உள்ள பிணைப்பாலும், பிராவோவை தோனி கலாய்க்கும் வகையில் வயதானவர் என கூறியதால், களத்தில் இருந்த சக வீரர்கள் சிரித்தனர். மேலும் ஸ்டம்ப் மைக்கில் அது பதிவானதால் வர்ணனையாளர்களும் சிரிப்பலையில் ஆழ்ந்தனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வயதான அணி என பலமுறை விமர்சிக்கப்பட்டாலும், அதனை முறியடித்து பீல்டிங் மற்றும் பவுலிங்கில் சாதித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

நேற்றையைப் போட்டியில் தோனி - பிராவோ இடைய

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com