\
காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற மாணவிக்கு உற்சாக வரவேற்பு

காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற மாணவிக்கு உற்சாக வரவேற்பு

காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற மாணவிக்கு உற்சாக வரவேற்பு
Published on

தென்னாப்ரிக்காவில் நடைபெற்ற காமன்வெல்த் பளு தூக்கும் போட்டியில் தங்கம் வென்ற மாணவி நிவேதாவுக்கு சொந்த ஊரான சேலத்தில் உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது.

சேலம் மாவட்டம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்த வெங்கடேசன்-சித்ரா தம்பதியின் மூத்த மகள் நிவேதா. இவர் தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற காமல்வெல்த் பளு தூக்கும் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார். பதக்கம் வென்று சொந்த ஊருக்கு வந்த நிவேதிதாவிற்கு, அவரது பள்ளி நிர்வாகத்தின் சார்பில் ரயில் நிலையத்திலேயே உற்சாக வரவேற்பளிக்கப்பட்டது. தொடர்ந்து சேலம் ரயில் நிலையத்திலிருந்து சாரட் வண்டியில் நிவேதா ஊர்வலமாக பள்ளிக்கு அழைத்து செல்லப்பட்டார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com