விளையாட்டு
சென்னை அணிக்கு வரவேற்பு: புதிய கால்பந்து பயிற்சியாளர் ஜான் கிரேகோரி
சென்னை அணிக்கு வரவேற்பு: புதிய கால்பந்து பயிற்சியாளர் ஜான் கிரேகோரி
ஐஎஸ்எல் கால்பந்து தொடரில் சென்னை அணிக்கு ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பு இருப்பதாக புதிய பயிற்சியாளர் ஜான் கிரேகோரி தெரிவித்துள்ளார்.
புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ள இங்கிலாந்தைச் சேர்ந்த ஜான் கிரோகோரியை அணியின் உரிமையாளரான அபிஷேக் பச்சன் அறிமுகம் செய்தார். அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கிரேகோரி, சென்னை அணியின் முன்னாள் பயிற்சியாளர் மார்க்கோ மேட்ரசியின் இடத்தை பூர்த்தி செய்வேன் என நம்புவதாக தெரிவித்தார். 5 வெளிநாட்டு வீரர்கள் மட்டுமே அணியில் விளையாட முடியும் என்ற விதிமுறை, இந்திய இளம் வீரர்களுக்கு அதிக வாய்ப்பு அளிக்க உதவும் என்று அவர் கூறினார். இதனிடையே பிரேசிலைச் சேர்ந்த ரஃபேல் அகஸ்டோவின் ஒப்பந்தத்தை சென்னையின் எப்.சி. அணி மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது.