\
ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய சஞ்சிதா சானுவுக்கு தடை

ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய சஞ்சிதா சானுவுக்கு தடை

ஊக்கமருந்து சோதனையில் சிக்கிய சஞ்சிதா சானுவுக்கு தடை
Published on

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற இந்திய பளுதூக்குதல் வீராங்கனை சஞ்சிதா சானு ஊக்கமருந்து சோதனையில் சிக்கினார். 

ஆஸ்திரேலியாவில் அன்மையில் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் 53 கிலோ எடைப்பிரிவில் சஞ்சிதா சானு தங்கப்பதக்கம் வென்றார். இந்த நிலையில் போட்டிக்கு பின் அவரிடம் நடத்தப்பட்ட சோதனையின் முடிவுகள் வெளியான நிலையில், அவரது உடலில் டெஸ்டாஸ்டரோன் என்ற வேதியியல் பொருள் கலந்திருந்தது தெரியவந்தது.

இதனையடுத்து போட்டிகளில் பங்கேற்க சஞ்சிதா சானுவுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச பளுதூக்குதல் சம்மேளனம் தெரிவித்துள்ளது. காமன்வெல்த் போட்டியில் வென்ற தங்கப்பதக்கமும் திரும்பப் பெறப்படுகிறது.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com