பழிவாங்க காத்திருக்கும் தென்னாப்பிரிக்கா: தப்பிக்குமா கோலி படை?

பழிவாங்க காத்திருக்கும் தென்னாப்பிரிக்கா: தப்பிக்குமா கோலி படை?

பழிவாங்க காத்திருக்கும் தென்னாப்பிரிக்கா: தப்பிக்குமா கோலி படை?
Published on

இந்தியாவில் படுமோசமாக டெஸ்ட் தொடரை இழந்ததற்கு பழி தீர்க்கும் விதமாக. தென்னாப்பிரிக்க வீரர்கள் களமிறங்குவார்கள் என்று அந்த அணியின் கேப்டன் டுபிளிசிஸ் கூறினார்.

இந்திய அணி, தென்னாப்பிரிக்காவுடன் 3 டெஸ்ட், 6 ஒரு நாள் போட்டி மற்றும் மூன்று டி20 கிரிக்கெட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி கேப்டவுனில் இன்று பிற்பகல் 2 மணிக்குத் தொடங்குகிறது. தென்னாப்பிரிக்காவில் முதல் முறையாக டெஸ்ட் தொடரை வெல்லும் உத்வேகத்தில் இந்திய அணி களமிறங்குகிறது. 

இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த தென்னாப்பிரிக்க அணியின் கேப்டன் டுபிளிசிஸ் கூறும்போது, ‘ஆடும் லெவனில் யாரை சேர்ப்பது என்பது அழகான தலைவலியாக இருக்கிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஸ்டெயின் அணிக்கு திரும்பியிருக்கிறார். அவர் உலக அளவில் சிறந்த பந்துவீச்சாளர். அவர் அணிக்கு வந்துள்ளதால் யாரை உட்கார வைப்பது, வேறு யாரை அணிக்குள் இழுப்பது என்கிற குழப்பம் இருக்கிறது. இருந்தாலும் வலுவான ஆடும் லெவனை ஏற்படுத்துவோம். கடந்த 2015-ம் ஆண்டு இந்தியாவில் டெஸ்ட் தொடரை மோசமாக தோற்றோம். அதற்கு பழிவாங்க தயாராக இருக்கிறோம். இந்திய கேப்டன் விராத் கோலி சிறந்த வீரர். அவருக்கு எங்களால் நெருக்கடி கொடுக்க முடியும் என்று நம்புகிறேன்’ என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com