இந்தியாவுக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 21 ரன் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
பெங்களூருவில் நடைபெற்ற இப்போட்டியில் 335 ரன் என்ற இலக்கை இந்திய அணி துரத்தியது. ரஹானே 53, ரோஹித் சர்மா 65 ரன் எடுத்தனர். சிறப்பாக ஆடிய கேதார் ஜாதவ் 67 ரன்னும் ஹர்திக் பாண்டியா 41 ரன்னும் சேர்த்தனர். எனினும் ஆஸ்திரேலிய வீரர்களின் அபார பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இந்திய அணி 8 விக்கெட் இழப்புக்கு 313 ரன் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.
தோல்விக்குப் பின் பேசிய இந்திய கேப்டன் விராத் கோலி, ’ஆஸ்திரேலிய அணி, முதல் 30 ஓவர்களில் வலுவான நிலையில் இருந்தது. 350 ரன்களுக்குள் அந்த அணியை கட்டுப்படுத்த வேண்டும் என்று நினைத்தோம். அதன்படி சிறப்பாகக் கட்டுப்படுத்தினோம். எங்களது ஓபனிங் பார்ட்ஷர்ஷிப் சிறப்பாக இருந்தது. ஆனால் ஒரு பெரிய பார்ட்னர்ஷிப் இல்லாமல் போய்விட்டது. அதனால் 330 ரன்களின் அருகில் சென்று தோற்றுவிட்டோம். உமேஷ் யாதவும் ஷமியும் நன்றாக பந்துவீசினார்கள். ஸ்பின்னர்களுக்கு எப்போதும் நல்ல நாட்களாக அமைந்துவிடாது. அதுபோல்தான் நேற்றும்’ என்றார்.