''இது தோனியின் இருக்கை; நாங்கள் அமரமாட்டோம்'' - சாஹல் வெளியிட்ட வீடியோ!

''இது தோனியின் இருக்கை; நாங்கள் அமரமாட்டோம்'' - சாஹல் வெளியிட்ட வீடியோ!
''இது தோனியின் இருக்கை; நாங்கள் அமரமாட்டோம்'' - சாஹல் வெளியிட்ட வீடியோ!

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டிக்கு பிறகு எந்தப் போட்டியிலும் விளையாடவில்லை. இந்திய அணி தொடர்ச்சியாக பல்வேறு தொடர்களில் விளையாடி வந்தாலும், எந்த தொடரிலும் அவர் இடம்பெறவில்லை. இந்த ஆண்டிற்கான வீரர்களின் ஒப்பந்தத்திலும் தோனி பெயர் இல்லை. அதனால், தோனி இனிமேல் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

தோனியின் எதிர்காலம் குறித்து அண்மையில் பேசிய இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி “ஐபிஎல் தொடர் வரவுள்ளது. எல்லோருக்கும் இது தெரியும். அவருக்கும் தெரியும், தேர்வாளர்களுக்கும் தெரியும்” என சூசகமாக கருத்து தெரிவித்தார்.

இந்நிலையில் தோனி குறித்த நினைவுகளை சாஹல் பகிர்ந்து கொண்டுள்ளார். இந்திய அணி வீரர்கள் பயணம் செய்யும் பேருந்தில் ஒவ்வொருவரிடமும் ஜாலியாக பேசிய சாஹல், தோனி குறித்தும் பேசியுள்ளார்.

அந்த வீடியோவை பிசிசிஐ பகிர்ந்துள்ளது. அதில் ஒவ்வொரு வீரரிடமும் சென்று சாஹல் பேசுகிறார். கடைசியாக பேருந்தின் கடைசி இருக்கைக்கு சென்ற அவர், ‘பேருந்தின் கடைசி ஓர இருக்கையில் நாங்கள் யாருமே அமரமாட்டோம். அது தோனியின் இடம். அந்த இடம் அவருக்கானது. நாங்கள் தோனியை மிஸ் செய்கிறோம்’ என தெரிவித்தார். தோனி குறித்த சாஹலின் இந்த வீடியோ பதிவு தற்போது வைரலாகி வருகிறது. இந்திய அணி மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய கிரிக்கெட் ரசிகர்களுமே தோனியை மிஸ் செய்வதாக ரசிகர்களும் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com