ரபாடா இப்படி நடந்து கொள்ளலாமா? கருத்துச் சொல்ல மறுத்த ஆம்லா!

ரபாடா இப்படி நடந்து கொள்ளலாமா? கருத்துச் சொல்ல மறுத்த ஆம்லா!
ரபாடா இப்படி நடந்து கொள்ளலாமா? கருத்துச் சொல்ல மறுத்த ஆம்லா!

ஒழுங்கீனமாக செயல்பட்ட ரபாடாவுக்கு அபராதம் விதித்தது பற்றி கேட்டதற்கு தென்னாப்பிரிக்க தொடக்க ஆட்டக்காரர் ஹாசிம் அம்லா கருத்துச் சொல்ல மறுத்துவிட்டார்.

இந்திய கிரிக்கெட் அணி, தென்னப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. நேற்று முன் தினம் நடந்த போட்டியில் வெற்றிபெற்று ஒரு நாள் தொடரை 4-1 என்ற கணக்கில் வென்று சாதனை படைத்தது. இந்தப் போட்டியின் போது அடித்து ஆடிக்கொண்டிருந்த ஷிகர் தவான், வேகப்பந்து வீச்சாளர் ரபாடா வீசிய பந்தில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அப்போது ’பை, பை வெளிய போ’ என்பது போல செய்கை செய்தார் ரபாடா. களத்தில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதற்கு அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று கடைசி ஒரு நாள் போட்டி, செஞ்சுரியனில் நடக்கிறது. 

இதுபற்றி பேட்டியளித்த ஹாசிம் அம்லாவிடம், ’ரபாடா இப்படி நடந்து கொள்ளலாமா?’ என்பது பற்றி கருத்துக் கேட்கப்பட்டது. அதற்கு அவர் பதில் சொல்ல மறுத்துவிட்டார். 

பின்னர் ஆம்லா கூறும்போது, ’ஒரு நாள் கிரிக்கெட்டில் இப்படியொரு நிலையில் இதற்கு முன் நாங்கள் இருந்ததில்லை. சமீபத்தில் சில தொடர்களை நாங்கள் வென்றிருந்தாலும் இந்த தொடர் வேறு மாதிரி அமைந்துவிட்டது. இதில் நாங்கள் சிறப்பான கிரிக்கெட்டை விளையாடவில்லை. உலகக் கோப்பை நெருங்கும் நிலையில் இளம் வீரர்கள் கற்றுக்கொள்ள இந்தத் தொடர் உதவியது. குறிப்பாகச் சுழல் பந்துவீச்சுகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்கிற நிலை ஏற்பட்டிருக்கிறது. இந்தத் தொடரில் இந்திய ஸ்பின்னர்கள் (சேஹல், குல்தீப்) அதிக விக்கெட் எடுத்திருக்கிறார்கள். உண்மையிலேயே அவர்கள் சிறப்பாகச் செயல்பட்டார்கள். ஆட்டத்தின் மிடிலில் அவர்கள் விக்கெட் எடுப்பதைத் தடுக்க முடியவில்லை. எங்கள் அணியில் ரபாடா நன்றாக பந்துவீசினார். ஒவ்வொரு போட்டியிலும் அவர் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை வீழ்த்துகிறார். லுங்கி நிகிடி இந்தத் தொடரில் அறிமுகமாகி இருக்கிறார். அவருக்கும் இது நல்ல அனுபவமாக இருக்கும்’ என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com