ஃபீல்டிங்கில் கோட்டை விட்டுவிட்டோம்: புஜாரா

ஃபீல்டிங்கில் கோட்டை விட்டுவிட்டோம்: புஜாரா

ஃபீல்டிங்கில் கோட்டை விட்டுவிட்டோம்: புஜாரா
Published on

சரியாக ஃபீல்டிங் செய்யாததால் இலங்கை உடனான கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்ற பெறவில்லை என்று இந்திய கிரிக்கெட் வீரர் புஜாரா கூறினார்.

டெல்லியில் நடைபெற்ற இந்திய- இலங்கை அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் சமனில் முடிவடைந்தது. இதனையடுத்து இந்திய அணி ஒன்றுக்கு பூஜ்யம் என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. 

பின்னர் புஜாரா கூறும்போது, ‘நாங்கள் சரியாக பீல்டிங் செய்யவில்லை. பல கேட்ச்-களை வீணடித்துவிட்டோம். அதனால் கடைசி டெஸ்டில் வெற்றிபெறமுடியவில்லை. இதை ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும்.  ஃபீல்டிங்கில் நாங்கள் இன்னும் முன்னேற கடுமையான பயிற்சி எடுக்க வேண்டும். ஒவ்வொரு கேட்ச்-சும் முக்கியம் என்பது தெரியும். சிலிப்பில் அதை நழுவ விடுவது சரியானதல்ல. இந்த தொடரில் இந்திய அணி சிறப்பாக பந்துவீசியது. கடைசி இரண்டு நாட்களில் பிட்ச்-சின் தன்மை மாறிவிட்டது. அதனால் ஸ்பின்னர்களுக்கு உதவவில்லை. இந்தத் தொடரில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சும் வேகப்பந்துவீச்சும் சிறப்பாக இருந்தது’ என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com