நாங்க ஒண்ணும் பவுலிங் மெஷின் இல்லை: இஷாந்த் சர்மா கோபம்

நாங்க ஒண்ணும் பவுலிங் மெஷின் இல்லை: இஷாந்த் சர்மா கோபம்

நாங்க ஒண்ணும் பவுலிங் மெஷின் இல்லை: இஷாந்த் சர்மா கோபம்
Published on

’பந்துவீச்சாளர்களும் மனிதர்கள்தான். நாங்கள் ஒன்றும் இயந்திரம் இல்லை’ என்று இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் இஷாந்த் சர்மா கூறினார்.

தென்னாப்பிரிக்காவுடனான இரண்டாவது டெஸ்ட் போட்டி செஞ்சுரியனில் நடந்துவருகிறது. இந்த போட்டியில் களமிறங்கியுள்ள இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

அவர் கூறும்போது, ‘முதல் டெஸ்ட் போட்டியிலேயே நான் விளையாடி இருக்க வேண்டும். காய்ச்சல் காரணமாக ஆடவில்லை. குணமான பின் இரண்டாவது போட்டியில் களமிறங்கினேன். அணியின் மூத்த பந்துவீச்சாளர் நான்தான். முக்கியமான விக்கெட்டுகளை வீழ்த்திய வேண்டிய பொறுப்பு எனக்கிருக்கிறது. பவுன்ஸ்தான் என் பலம். அதை எப்படி சரியாகப் பயன்படுத்தி விக்கெட் எடுக்க வேண்டும் என்றுதான் பார்க்கிறேன். என்னுடன் பந்துவீசும் மற்ற பந்துவீச்சாளர்களைக் குறை சொல்கிறார்கள். அது தவறு. பந்துவீச்சாளர்களும் மனிதர்கள்தான். களத்தில் இறங்கிய உடனேயே விக்கெட்டுகளை வீழ்த்தி விட, நாங்கள் ஒன்றும் மெஷின் இல்லை.

பேட்ஸ்மேன்களின் பலவீனமான ஏரியா எது என்பதறிந்து அந்த பகுதியில் பந்துவீசி விக்கெட் வீழ்த்துவது, அதிக ரன்களை விட்டுக்கொடுக்காமல் பீல்டிங்கை ஒழுங்குபடுத்துவது பற்றிதான் யோசித்து விளையாடுகிறோம். பீல்டிங் மோசமாக இருந்ததாகவும் சில கேட்ச்-களை விட்டுவிட்டதாகவும் புகார் சொல்கிறார்கள். விளையாட்டில் இது சகஜம். அவர்கள் சில சிறந்த கேட்ச்களை பிடித்திருக்கிறார்கள் என்பதை மறந்துவிடக் கூடாது. அதனால் அதைக் கண்டு பயப்பட வேண்டாம்’ என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com