"இந்திய பவுலர்களிடம் எச்சரிக்கையாகவே இருப்போம்"-அலெக்ஸ் கரே !

"இந்திய பவுலர்களிடம் எச்சரிக்கையாகவே இருப்போம்"-அலெக்ஸ் கரே !
"இந்திய பவுலர்களிடம் எச்சரிக்கையாகவே இருப்போம்"-அலெக்ஸ் கரே !

இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா, முகமது ஷமி ஆகியோரிடம் எச்சரிக்கையாகவே இருப்போம் என்று ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் அலெக்ஸ் கரே தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஒருநாள், டி20, டெஸ்ட் கிரிக்கெட்டில் பங்கேற்க இருக்கிறது. இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நவம்பர் 27-ஆம் தேதி தொடங்குகிறது. இந்நிலையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் பேட்டியளித்துள்ளார்.

அதில் "பும்ராவும்,முகமது ஷமியும் எத்தனை முக்கியமான பவுலர்கள் என்று எங்கள் அனைவருக்கும் தெரியும். அதனால் எச்சரிக்கையாக இருப்போம். அதேவேளையில் எங்கள் அணியில் திறமையான பேட்ஸ்மேன்களும் இருக்கிறார்கள். அவர்கள் மேல் நம்பிக்கை இருக்கிறது. மேலும் டேவிட் வார்னர், பின்ச் ஆகியோர் ஏற்கெனவே இந்திய வேகப்பந்தை சிறப்பாக விளையாடி இருக்கிறார்கள்" என்றார் அலெக்ஸ் கரே.

மேலும் "இந்திய சுழற்பந்துவீச்சாளர்கள் சஹால், ஜடேஜாவும் சிறப்பானவர்கள்தான். எங்கள் அணியின் பவுலர்களான கம்மின்ஸ், மிட்சல் ஸ்டார்க், ஆடம் ஜாம்பா, ஹேசல்வுட் ஆகியோர் எப்படி பந்துவீசப் போகிறார்கள் என்பதை காண ஆவலோடு இருக்கிறேன். இரு அணியிலும் சிறப்பான வீரர்கள் இருக்கிறார்கள். நாங்கள் அடிக்கடி விளையாடுகிறோம். அது இரு அணிக்கும் சாதகமான அம்சம்தான்" என்றார் அலெக்ஸ் கரே.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com