விளையாட்டு
ராகுல் உடல்நலனை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம்: ரவி சாஸ்திரி
ராகுல் உடல்நலனை உன்னிப்பாகக் கவனித்து வருகிறோம்: ரவி சாஸ்திரி
இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் லோகேஷ் ராகுலின் உடல் நலம் குறித்து உன்னிப்பாக கவனித்து வருவதாக பயிற்சியாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட அவரின் உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக சாஸ்திரி தெரிவித்தார். அடுத்த டெஸ்ட் போட்டியில் லோகேஷ் ராகுலை களமிறக்குவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். இந்தியா - இலங்கை அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி, நாளை மறுதினம் கொழும்புவில் தொடங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.