இந்திய அணியில் அர்ஜூன் டெண்டுல்கர்: சச்சின் ஹேப்பி
இந்திய கிரிக்கெட் அணியில் தனது மகன் அர்ஜூன் இடம் பெற்றுள்ளது மகிழ்ச்சியளிப்பதாக சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன். தந்தையை போலவே அர்ஜூனுக்கும் கிரிக்கெட்டில் அதிக ஆர்வம். அர்ஜூன் இடக்கை வேகப்பந்துவீச்சாளர் மேலும் அவர் ஒரு ஆல்ரவுண்டராக உருவாகி வருகிறார். இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவில் நடந்த போட்டியில் 27 பந்துகளில் 48 ரன்கள் எடுத்ததுடன், 4 ஓவர்கள் வீசி நான்கு விக்கெட்டுகளும் வீழ்த்தியிருந்தார். தற்போது இவர் 19 வயதிற்குட்பட்ட இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளார்.
இதுகுறித்து பேசியுள்ள சச்சின், “19 வயதிற்குட்பட்ட இந்திய கிரிக்கெட் அணியில் என் மகன் அர்ஜூன் டெண்டுல்கர் இடம்பெற்றது மகிழ்ச்சி. அர்ஜூனின் கிரிக்கெட் வாழ்க்கையில் இது ஒரு முக்கிய மைல்கல். அர்ஜூன் வெற்றியடைய நானும், எனது குடும்பத்தினரும் பிரார்த்திப்போம்.” என தெரிவித்துள்ளார்.