எதிரணி குறித்து எப்போதுமே கவலைப்படுவதில்லை என்று இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி தெரிவித்துள்ளார்.
இந்தியா-ஆஸ்திரேலிய அணிகள் இடையிலான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் புனேவில் நாளை தொடங்குகிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி, நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் வங்கதேச அணிகளுக்கு எதிரான தொடர்களை வென்றதில் வேகப்பந்து வீச்சாளர்களின் பங்களிப்பு முக்கியமானது என்றார். சுழற்பந்து வீச்சாளர் சிறப்பாக செயல்பட வேகப்பந்து வீச்சாளர்களின் ஒத்துழைப்பு அவசியம் என்று அவர் குறிப்பிட்டார். மேலும், தானக்கு 22 வயதாக இருந்த போதே 35 வயதானவரின் முதிர்ச்சியான அணுகுமுறையை தன்னிடம் மற்றவர்கள் எதிர்பார்த்ததாக கூறிய விராத் கோலி, அந்த முதிர்ச்சி அனுபவத்தின் மூலம் படிப்படியாக வரும் என்றார். எதிரணி குறித்து கவலைப்படுவதில்லை என்று கூறிய கோலி, அவர்களின் திறன்கள் குறித்து தெளிவாக அறிந்து வைத்துள்ளதாகவும் கூறினார்.