போதையில் வாகனம் ஓட்டிய கால்பந்து வீரர் ரூனிக்கு 2 ஆண்டுகள் தடை

போதையில் வாகனம் ஓட்டிய கால்பந்து வீரர் ரூனிக்கு 2 ஆண்டுகள் தடை

போதையில் வாகனம் ஓட்டிய கால்பந்து வீரர் ரூனிக்கு 2 ஆண்டுகள் தடை
Published on

இங்கிலாந்து கால்பந்து அணியின் முன்னாள் கேப்டன் வைன் ரூனிக்கு இரண்டு ஆண்டுகள் வாகனங்களை ஓட்ட தடைவிதிக்கப்பட்டுள்ளது.

மது போதையில் வாகனம் ஓட்டிய வழக்கில் சிக்கிய வைன் ரூனிக்கு ஸ்டாக்போர்ட் நீதிமன்றம் இந்த தீர்ப்பை அளித்துள்ளது. 100 மணி நேரம் அவர் சமுதாய பணி செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 31 வயதாகும் ரூனி அன்மையில் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார்.

31 வயதான வெய்ன் ரூனி, 53 கோல்களுடன் அதிக கோல் அடித்த இங்கிலாந்து வீரர் என்ற சாதனை படைத்தவர். மொத்தம் 119 போட்டிகளில் ரூனி விளையாடியது இங்கிலாந்து கால்பந்து வரலாற்றில் ஒரு சாதனையாகும். தனது 17-வது வயதில் 2003 ஆம் ஆண்டு வெய்ன் ரூனி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக முதல் போட்டியில் ஆடினார். அப்போது இளம் வயதில் தேசிய அணியில் இடம்பெற்ற வீரர் என்பதால் உடனேயே நட்சத்திர தகுதி பெற்றார் ரூனி.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com