துபாயில் விராட் கோலிக்கு திறக்கப்பட்ட மெழுகு சிலை

துபாயில் விராட் கோலிக்கு திறக்கப்பட்ட மெழுகு சிலை
துபாயில் விராட் கோலிக்கு திறக்கப்பட்ட மெழுகு சிலை

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு துபாயில் மெழுகு சிலை திறக்கப்பட்டுள்ளது.

லண்டனில் மிகவும் பிரபலமான மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகம், துபாயில் தனது புதிய கிளையைத் தொடங்கியது. இருபது ஓவர் உலகக்கோப்பை தொடர் தற்போது அமீரகத்தில் நடைபெற்று வரும் நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான விராட் கோலியின் மெழுகு சிலையை மேடம் டுசாட்ஸ் திறந்துள்ளது. கால்பந்து வீரர் மெஸ்ஸி, நடிகர்கள் டாம் க்ரூஸ், ஜாக்கி சான் உள்ளிட்டோரின் மெழுகு சிலைகளும் துபாயில் தற்போது திறக்கப்பட்டுள்ளன. இந்நிறுவனம் ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றபோது, விராட் கோலிக்கு லார்ட்ஸ் மைதானத்தில் ஒரு மெழுகு சிலையை திறந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com