சிஎஸ்கே ரசிகர்களுக்கு வீடியோ மூலம் நன்றி தெரிவித்த வாட்சன்

சிஎஸ்கே ரசிகர்களுக்கு வீடியோ மூலம் நன்றி தெரிவித்த வாட்சன்

சிஎஸ்கே ரசிகர்களுக்கு வீடியோ மூலம் நன்றி தெரிவித்த வாட்சன்
Published on

கிரிக்கெட் வீரர் வாட்சன் சிஎஸ்கே ரசிகர்களுக்கு வீடியோ மூலம் நன்றி தெரிவித்துள்ளார்

கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த ஆல்ரவுண்டர் என்ற பட்டியலை எடுத்தால் ஆஸ்திரேலிய வீரர் வாட்சன் பெயர் நிச்சயம் இருக்கும். அவரை அந்நிய நாட்டுக்காரர் என்றே மனம் ஒத்துகொள்ள முடியாத அளவுக்கு வாட்சன் இந்தியாவோடு ஒன்றிணைந்து விட்டார். காரணம் ஐபிஎல் தான். குறிப்பாக வாட்சனுக்கு சென்னை ரசிகர்கள் மனதில் ஒரு தனி இடம் உண்டு.

சென்னை அணியோடு ஒன்றியவர் வாட்சன். இந்நிலையில் நேற்றைய கடைசி ஆட்டத்துக்கு பின்பு சிஎஸ்கே அணி நிர்வாகத்திடம் ஷேன் வாட்சன் தான் ஓய்வுப்பெறுவதாக தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானது. இந்நிலையில் இன்று அதிகாரப்பூர்வமாக ஓய்வை வீடியோ மூலம் அறிவித்தார் வாட்சன்.

இந்நிலையில் வாட்சன், சிஎஸ்கே ரசிகர்களுக்கு வீடியோ மூலம் நன்றி தெரிவித்துள்ளார். நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். கடந்த 3 ஆண்டுகள் என் கிரிக்கெட் வாழ்க்கையில் சிறப்பான காலம் என தெரிவித்துள்ளார். அவர் பேசிய வீடியோவை சிஎஸ்கே பகிர்ந்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com