தோனி மகளுடன் கொஞ்சி பேசும் விராட் கோலி: வைரலாகும் வீடியோ
மகேந்திர சிங் தோனியின் மகளுடன் கேப்டன் விராட் கோலி கொஞ்சி பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதலாவது டி20 போட்டி நேற்று ராஞ்சியில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. தோனியின் சொந்த ஊரான ராஞ்சியில் இந்த போட்டி நடைபெற்றபோது அவர் பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதனிடையே, கேப்டன் கோலி, தோனியின் இரண்டு வயது மகள் ஜிவாவுடன் நேற்று நீண்ட நேரம் கழித்தார். அப்போது சிறுமி ஜிவா-வுடன் கோலி கொஞ்சி பேசினார். இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோவை கோலி பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் தோனி மகள் ஜிவாவும், கோலியும் பேசிக் கொள்கிறார்கள். ஜிவா பேசுவதை கேட்டு கோலி களகளவென சிரிக்கிறார். இது மிகவும் ரசிக்கும்படியாக உள்ளது. மேலும், “ஜிவா-வுடன் மீண்டும் இணைந்துள்ளேன். நம்மைச் சுற்றி களங்கமில்லா சூழல் இருப்பதுதான் ஆசீர்வாதம்” என்று கோலி குறிப்பிட்டுள்ளார்.