“தோனியே மறுத்துவிட்டார்” : கோலியின் ஆட்டோகிராஃபில் நெகிழ்ந்த ரசிகை

“தோனியே மறுத்துவிட்டார்” : கோலியின் ஆட்டோகிராஃபில் நெகிழ்ந்த ரசிகை

“தோனியே மறுத்துவிட்டார்” : கோலியின் ஆட்டோகிராஃபில் நெகிழ்ந்த ரசிகை
Published on

ரன் மிஷின் என்று அழைக்கப்படும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலிக்கு கிரிக்கெட் உலகில் லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவர், எப்போதெல்லாம் வெளிநாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொள்கிறாரே, அப்போது ரசிகர்களுடன் உரையாடுவதை தன்னுடைய சிறப்பாக வைத்துள்ளார்.

லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியின் போது இந்திய வீரர்கள் ஹோட்டலில் இருந்து ஆடுகளத்திற்கு கிளம்பிச் சென்று கொண்டிருந்தனர். அப்போது, இந்திய வீரர்களிடம் ஆட்டோகிஃராப் வாங்குவதற்கு ரசிகர்கள் ஹோட்டலுக்கு வெளியே காத்திருந்தார்கள். 

அப்போது, ஹோட்டலில் இருந்து வெளியே வரும் வீரர்களை பாதுகாப்பாக பேருந்துக்கு அனுப்பும் பணியில் நிர்வாகிகள் ஈடுபட்டு இருந்தனர். வீரர்களுக்கு அருகில் ரசிகர்கள் நெருங்கவிடாமல் அவர்கள் தடுத்தனர். அதனையும் மீறி ஒரு ரசிகை இந்திய வீரர்களிடம் ஆட்டோகிராப் வாங்க முயற்சித்துக் கொண்டிருந்தார். 

ஒவ்வொரு வீரராக வரும் போது அவர்களிடம் அணுகி அந்த ரசிகை ஆட்டோகிராப் கேட்பார். ஆனால், அவர்கள் நேராக பேருந்துக்கு சென்றார்கள். முன்னாள் கேப்டன் தோனி ஹோட்டலில் இருந்து வந்த போது அவரையும் அந்த ரசிகை அணுகியுள்ளார். ஆனால், தோனி முடியாது என்பது போல் சைகை காட்டிவிட்டு சென்றுவிட்டார். அதேபோல், கே.எல்.ராகுல் உள்ளிட்ட பலரும் சென்றுவிட்டார்கள். 

பின்னர், விராட் கோலி வந்துள்ளார். அவர் வரும் போதே போனில் பேசிக்கொண்டே வந்தார். ரசிகை அவரையும் அணுகிய போது, நின்று ஆட்டோகிஃராப் போட்டார் விராட் கோலி. இதனால், அந்த ரசிகை அளவில்லா மகிழ்ச்சி அடைந்தார். இந்த வீடியோவை பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

ரசிகர்களிடம் கோலி இதுபோல் நடந்து கொள்வது இது முதன்முறை அல்ல. ஏற்கனவே 2018 ஐபிஎல் தொடரின் போது ஹோட்டலுக்கு செல்லும் வழியில் 4 சிறுவர்களுக்கு நின்று அவர் ஆட்டோகிஃராப் போட்டுவிட்டுச் சென்றார்.

இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி 1-2 என்ற கணக்கில் தோல்வியை தழுவியது. இருப்பினும் விராட் கோலி சிறப்பாக விளையாடி ரன்களை எடுத்தார். 

இந்த ரன் குவிப்பின் மூலம் பல்வேறு சாதனைகளையும் படைத்தார். வேகமாக 3000 ரன்களை சேர்த்த கேப்டன் என்ற சாதனையை கோலி படைத்தார். 49 இன்னிங்சில் அவர் இந்த மைல்கல்லை எட்டியுள்ளார். இதற்கு முன்பு ஏபி டிவில்லியர்ஸ்(60), தோனி (70) கங்குலி(74), கிரீம் ஸ்மித் மற்றும் மிஸ்பா உல் ஹாக்(83) ஆகியோர் வேகமாக 3000 ரன்களை குவித்தனர். அதேபோல், இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் வேகமாக 2000 ரன்களை குவித்த முதல் இந்தியர் என்ற மைல்கல்லை எட்டினார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com