\
பங்களாதேஷ் அணியின் பேட்டிங் ஆலோசகர் ஆனார் வாசிம் ஜாபர்

பங்களாதேஷ் அணியின் பேட்டிங் ஆலோசகர் ஆனார் வாசிம் ஜாபர்

பங்களாதேஷ் அணியின் பேட்டிங் ஆலோசகர் ஆனார் வாசிம் ஜாபர்
Published on: 

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் பேட்டிங் ஆலோசகராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் நியமிக்கப்பட்டுள்ளார்.

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்களாதேஷ் கிரிக்கெட் அணி, அரையிறுதிக்குள் நுழையாமல் வெளியேறியதை அடுத்து, அந்த அணியின் பயிற்சியாளர் ஸ்டீவ் ரோட்ஸ் நீக்கப்பட்டார். இதையடுத்து புதிய பயிற்சியாளரை அந்த அணி தேடி வருகிறது. 

இதற்கிடையே அந்த அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து கிரிக்கெட் விளையாட இருக்கிறது. இதற்கான பேட்டிங் ஆலோசகராக, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபரை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஒப்பந்தம் செய்து ள்ளது. பந்துவீச்சு பயிற்சியாளராக இலங்கையை சேர்ந்த சம்பகா ரமனாயகே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com