வாஷிங்டன் சுந்தர் அரை சதம்! 'பாலோ ஆன்' தவிர்க்க இந்தியா போராட்டம்!

வாஷிங்டன் சுந்தர் அரை சதம்! 'பாலோ ஆன்' தவிர்க்க இந்தியா போராட்டம்!

வாஷிங்டன் சுந்தர் அரை சதம்! 'பாலோ ஆன்' தவிர்க்க இந்தியா போராட்டம்!
Published on

சென்னையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் 4 ஆம் நாள் ஆட்டத்தில் ஆல் ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர் அரை சதமடித்தார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்த தொடரின் முதல் ஆட்டம் சென்னை - சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது. முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி 190.1 ஓவர்களுக்கு 578 ரன்களை குவித்துள்ளது. அந்த அணியின் கேப்டன் ரூட் இந்தியாவுக்கு எதிராக போட்ட ஸ்கெட்ச் பக்கா மாஸாக அமைந்தது. ரூட் மட்டுமே 218 ரன்களை குவித்தார். அவருக்கு உறுதுணையாக சிப்லே, மற்றும் ஸ்டோக்ஸின் ஆட்டம் அமைந்திருந்தது.

தொடர்ந்து இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸை மூன்றாம் நாளான நேற்று விளையாடத் தொடங்கியது. ரோகித், கில், கோலி, ரஹானே என இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்பியது அணிக்கு பின்னடைவாக அமைந்தது. பின்னர் களம் இறங்கிய பண்டுடன் புஜாரா கூட்டு சேர, இருவரும் 119 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.

புஜாரா 73 ரன்களிலும், பண்ட் 91 ரன்களிலும் பெவிலியன் திரும்ப 6 விக்கெட் இழந்த நிலையில் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்தியா 257 ரன்களை குவித்தது. வாஷிங்டன் சுந்தரும், அஷ்வினும் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து அணிக்காக அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் டாம் பெஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆர்ச்சர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் இந்திய 321 ரன்கள் பின்தங்கியது.

இந்நிலையில் இன்று நான்காம் நாள் ஆட்டத்தில் தொடர்ந்து விளையாடிய வாஷிங்டன் சுந்தர் அரை சதமடித்தார். அஸ்வின் அவருக்கு உறுதுணையாக விளையாடி வருகிறார். ஆஸ்திரேலியாவின் பிரிஸ்பேனில் அரைசதமடித்த வாஷிங்டன் சுந்தர், இப்போது சென்னை சேப்பாக்கத்தில் தன்னுடைய சொந்த மண்ணிலும் அரை சதம் கடந்து விளையாடி வருகிறார். இந்திய அணி இப்போது 6 விக்கெட் இழப்புக்கு 289 ரன்கள் எடுத்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com