பவர்பிளேயில் கலக்குவார் வாஷிங்டன்: சேஹல் நம்பிக்கை

பவர்பிளேயில் கலக்குவார் வாஷிங்டன்: சேஹல் நம்பிக்கை

பவர்பிளேயில் கலக்குவார் வாஷிங்டன்: சேஹல் நம்பிக்கை
Published on

தமிழக ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தர், இந்த வருட ஐபிஎல்-லில் விராத் தலைமையின் கீழ் பெங்களூருக்காக களமிறங்குகிறார், இந்தாண்டு! இந்திய அணிக்காக, ரோகித் சர்மா தலைமையின் கீழ் மட்டுமே ஆடியிருக்கிற வாஷிங்டனுக்கு கோலியின் கேப்டன்ஷிப் புதுமையாகத்தான் இருக்கும்.

பெங்களூரில் தொடங்கிவிட்டது பயிற்சி. சுழல் மற்றும் பேட்டிங்கில் இந்த ஐபிஎல்-லில் வாஷிங்டன் ராஜ்ஜியம், வளர வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் கிரிக்கெட் ஆய்வாளார்கள். ஏனென்றால், இலங்கை முத்தரப்பு டி20 தொடரில் வாஷிங்டன் பெற்ற தொடர் நாயகன் விருது!

பதினோறாவது ஐ.பி.எல். டி 20 கிரிக்கெட் போட்டி வரும் 7ஆம் தேதி முதல் மே 27 ஆம் தேதி வரை நடக்கிறது. தொடக்க போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸும் மல்லுகட்டுகின்றன. ஐபிஎல் போட்டியை பொறுத்தவரை பெங்களூர் அணி, ஒருமுறை கூட கோப்பையை வென்றதில்லை. இந்த முறை அதை வென்றே தீர வேண்டும் என்று வெறி கொண்டிருக்கிறார் விராத். அதற்கான திட்டங்கள் அடுக்கடுக்காக நடக்கிறது அங்கு. அதில் ஒன்று மேஜிக் சுழல். பெங்களூரின் இந்தாண்டு பலம் சேஹலும், வாஷிங்டன் சுந்தரும்!


என்ன சொல்கிறார் சேஹல்? 

’வாஷிங்டன் சிறப்பாக பந்து வீசுபவர். இலங்கையில் நடந்த தொடரில் அவர் ஆடியது எல்லோருக்கும் நினைவிருக்கும். பவர்பிளேயில் அவர் ரன்களை கட்டுப்படுத்தி விடுகிறார். அல்லது விக்கெட் வீழ்த்தி விடுகிறார். அவர் பவர்பிளேயை பார்த்துக்கொண்டால் நான் மிடில் ஆர்டரில் பந்து வீசுவேன். கேப்டன் விராத் கோலி இப்போது ஆப்ஷன் கிடைத்திருக்கிறது. இதற்கு முன் நடந்த ஐபிஎல் போட்டியில் நான் பவர்பிளேயில் பந்துவீசியிருக்கிறேன். இப்போது அதை மாற்றிக்கொள்வோம். இதை நாங்கள் சரியாகப் பயன்படுத்திக்கொள்வோம் என நினைக்கிறேன். சுழற் பந்துகளில் பேட்ஸ்மேன்கள் அதிக ரன்கள் எடுப்பார்கள் என்பதை மறுக்க முடியாது. அதை விக்கெட்டாக மாற்ற முயற்சிக்க வேண்டும். பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் விளையாடி எனக்கு அனுபவம் இருக்கிறது. கடந்த முறை இருந்த பிட்ச் பேட்டிங்கிற்கு சாதகமாக அமைந்தது. குறைந்தது 200 ரன்களுக்கு மேல் எடுக்க முடிந்தது. இந்த முறையும் பிளாட் பிட்சாகத்தான் இருக்கும் என நினைக்கிறேன்’ என்கிறார் சேஹல்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com