கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீருக்கு பிடிவாரண்ட்!

கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீருக்கு பிடிவாரண்ட்!

கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீருக்கு பிடிவாரண்ட்!
Published on

சமீபத்தில் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற கவுதம் காம்பீருக்கு டெல்லி நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. 

உத்தரபிரதேச மாநிலம் காஸியாபாத்தில் உள்ள இந்திராபுரத்தில், கடந்த 2011ஆம் ஆண்டில் அடுக்குமாடி குடியிருப்பு திட்டம் ஒன்று தொடங்கப்பட்டது. இதை தொடங்கிய ரியல் எஸ்டேட் நிறுவனம், கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீரை விளம்பர தூதராக நியமித்து விளம்பரம் செய்தது. 

(அந்த விளம்பரம்)

இதில், 17 பேர் வீடுகளை வாங்குவதற்காக ரூ.1.98 கோடி ரூபாயை அந்த நிறுவனத்திடம் கொடுத்துள்ளனர். ஆனால் வீடு கட்டும் பணி தொடங்கப்படவில்லை. அதனால், இதன் விளம்பர தூதர் கவுதம் கம்பீர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டெல்லி நீதிமன்றத்தில் 17 பேர் மனு தாக்கல் செய்து இருந்தனர். 

இந்த வழக்கில் ஆஜராகும்படி கவுதம் கம்பீருக்கு நீதிமன்றம் பலமுறை சம்மன் அனுப்பியிருந்தது. அவர் ஆஜராகாமல், ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்கக்கோரி மனு தாக்கல் செய்தார். அதை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, அவர் புதன்கிழமை நேரில் ஆஜராக வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில், இந்த வழக்கு புதன்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.


கவுதம் கம்பீர் நேரில் ஆஜராகாததால் அவருக்கு எதிராக ரூ.10,000 தொகையில் பிணையுடன் வெளிவரக் கூடிய வாரண்ட் பிறப்பித்தது. பின்னர் வழக்கு விசாரணையை ஜனவரி மாதம் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com