ஸ்மித், வார்னர் ஐபிஎல்லில் விளையாடவும் தடை - ஐபிஎல் தலைவர் அதிரடி

ஸ்மித், வார்னர் ஐபிஎல்லில் விளையாடவும் தடை - ஐபிஎல் தலைவர் அதிரடி

ஸ்மித், வார்னர் ஐபிஎல்லில் விளையாடவும் தடை - ஐபிஎல் தலைவர் அதிரடி
Published on

பந்தை சேதப்படுத்திய சர்ச்சையில் சிக்கிய ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித், கேப்டன் பொறுப்பில் இருந்து கழட்டிவிடபட்ட நிலையில் ஐபிஎல் தொடரில் விளையாடவும் தடை விதிக்கபட்டுள்ளது.

தென்னாப்பிரிக்கா அணிக்கெதிரான கேப்டவுன் டெஸ்ட் போட்டியில் பந்தை சேதப்படுத்தியதாக ஆஸ்திரேலிய வீரர் கேமரூன் பான்கிராஃப்ட் மீது குற்றம் சாட்டப்பட்டது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பந்தை சேதப்படுத்தியதை ஒப்புக்கொண்டதோடு இது அணியில் முக்கிய வீரர்களுக்கும் தெரியும் எனவும் கூறி இருந்தார். இந்த விவகாரத்தில் அஸ்திரேலிய பிரதமர் வரை தலையிட கிரிக்கெட் அரங்கில் பெரும் விவாதத்தை உண்டாக்கியது.இதனால் நெருகடிக்கு உள்ளானது அணி நிர்வாகம். இதனையடுத்து கேப்டன் ஸ்மித் மற்றும் துணை கேப்டன் வார்னர் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர்.


இந்த விவகாரம்குறித்து விசாரித்த ஐசிசி, ஸ்மித்துக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடையும், போட்டி ஊதியம் முழுவதையும் அபராதமாக விதித்து உத்தரவிட்டது. மேலும் ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்தும் ஸ்மித் விலகியிருந்தார். இந்தநிலையில் ஸ்மித் மற்றும் வார்னர் ஐபிஎல் போட்டியில் விளையாடவும் தடை விதிக்கபட்டுள்ளது. இது பற்றி கருத்து தெரிவிதுள்ள ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா “ அஸி.கிரிக்கெட் வாரியத்தால் தடை செய்யபட்டுள்ள ஸ்மித்,வார்னர் இருவரும் ஐபிஎல் போட்டியில் பங்கேற்க முடியது. அவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்கள் விளையடுவார்கள்’ என தெரிவித்துள்ளார்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com