பதம் பார்த்தது பவுன்சர் பந்து: டேவிட் வார்னர் காயம்

பதம் பார்த்தது பவுன்சர் பந்து: டேவிட் வார்னர் காயம்

பதம் பார்த்தது பவுன்சர் பந்து: டேவிட் வார்னர் காயம்
Published on

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர், பவுன்சர் பந்தை அடிக்கும் போது காயம் அடைந்தார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, பங்களாதேஷ் சென்று டெஸ்ட் போட்டிகளில் விளையாட இருக்கிறது. இதற்காக அந்த அணி வரும் வெள்ளிக்கிழமை பங்களாதேஷ் புறப்படுகிறது. முன்னதாக, மூன்று நாள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது. இதில் டேவிட் வார்னர் லெவன் அணியும் ஸ்மித் லெவன் அணியும் மோதுகின்றன. இன்று நடந்தப் போட்டியில் பந்துவீச்சாளர் ஜோஷ் ஹாஸ்ல்வுட் வீசிய பவுன்சர் பந்தை வார்னர் அடிக்க முயன்றார். அது அவரை பலமாக தாக்கியது. இதில் நிலைதடுமாறி விழுந்தார். அவர் கழுத்தில் காயம் ஏற்பட்டதையடுத்து மைதானத்தில் இருந்து வெளியேறினார். டாக்டர்கள் உடனடியாக அவருக்கு சிகிச்சை அளித்தனர். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com