டேவிட் வார்னர் விக்கெட்: ’சைனாமேன்’ புது திட்டம்

டேவிட் வார்னர் விக்கெட்: ’சைனாமேன்’ புது திட்டம்

டேவிட் வார்னர் விக்கெட்: ’சைனாமேன்’ புது திட்டம்
Published on

டேவிட் வார்னரின் விக்கெட்டை விரைவில் எடுக்க வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் சைனாமேன் வகை சுழற்பந்துவீச்சாளர் குல்தீப் யாதவ் கூறினார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. சென்னையில் நடந்த முதலாவது ஒருநாள் போட்டியில் இந்தியா வெற்றிபெற்றது. இரண்டாவது ஒரு நாள் போட்டி, கொல்கத்தாவில் இன்று நடக்கிறது. இந்தப் போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவின் பந்து வீச்சு முக்கியமானதாக இருக்கும் என்று கூறப்படுகிறது. 

இந்தப் போட்டி பற்றி குல்தீப் யாதவ் கூறும்போது, ‘ எந்த வீரருக்கு எதிராகவும் என்னால் சிறப்பாக பந்துவீச முடியும். அதே போலதான் டேவிட் வார்னருக்கும் பந்து வீசுகிறேன். சென்னை போட்டியில் அவரது விக்கெட்டை வீழ்த்தினேன். அவருக்கு பந்துவீசுவதில் எனக்கு எந்த அழுத்தமும் இல்லை. ஆனால், எனது பந்தை எதிர்கொள்ளும் டேவிட் வார்னருக்கு நெருக்கடி இருக்கும் என்று நினைக்கிறேன். அவருக்கு எதிராக உற்சாகமாகப் பந்து வீசுகிறேன். அடுத்தடுத்த போட்டிகளிலும் அவர் விக்கெட்டை வீழ்த்த முடியும் என நம்புகிறேன். முதல் மற்றும் மூன்றாவதாக களமிறங்கும் வீரர்களின் விக்கெட்டுகளை முதலிலேயே எடுத்துவிட்டால், எந்த அணியாக இருந்தாலும் கண்டிப்பாக நெருக்கடி இருக்கும். எங்கள் நோக்கமும் ஓபனிங்கில் களமிறங்கும் வீரரின் விக்கெட்டை வீழ்த்துவதுதான். குறிப்பாக வார்னரை விரைவில் வீழ்த்த வேண்டும் என்பது. அதற்கு சிறப்பு திட்டம் வைத்திருக்கிறோம். ஏனென்றால் அவர் எந்த நேரத்திலும் போட்டியை அவர்களுக்கு சாதகமாக மாற்றும் திறமை கொண்டவர். ஸ்மித்தும் அப்படிப்பட்டவர்தான்’ என்றார். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com