\
ரிவ்யூவில் வீழ்ந்த வார்னர்!

ரிவ்யூவில் வீழ்ந்த வார்னர்!

ரிவ்யூவில் வீழ்ந்த வார்னர்!
Published on

நடப்பு ஐபிஎல் சீசனின் எலிமினேட்டரில் சன்ரைசர்ஸ் ஹைதரபாத் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் விளையாடி வருகின்றன.

டாஸை இழந்து முதலில் பேட்ஸ் செய்த பெங்களூர் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 131 ரன்களை எடுத்தது. 

சுலபமான இலக்கை விரட்டிய ஹைதராபாத்துக்கு முதல் ஓவரிலேயே கோஸ்வாமியின் விக்கெட்டை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தது பெங்களூர். 

இருப்பினும் அந்த அணியின் கேப்டன் வார்னர் நிதானமாக விளையாடினார். 

சிராஜ் வீசிய 6வது ஓவரின் நான்காவது பந்தை வார்னர் ஆட முயன்ற போது கிளவுக்கு கீழே சென்ற பந்து விக்கெட் கீப்பர் ஏபிடியின் கைகளை தஞ்சமடைந்தது. அதற்கு அவுட் என அம்பயரிடம் அப்பீல் செய்தார் சிராஜ். இருப்பினும் அம்பயர் அவுட் கொடுக்காமல் இருக்க நீண்ட யோசனைக்கு பிறகு கோலி அம்பயரின் முடிவை ரிவ்யூ செய்தார். 

தொழில்நுட்ப உதவியோடு அந்த பந்து வார்னரின் கிளவ் அல்லது பேட்டில் பட்டதா என்பதை  ஆராய்ந்த  போது பந்து கிளவ்வில் பட்டது தெளிவானது. 

அதனால் அம்பயர் தனது முடிவை மாற்றிக் கொண்டு அவுட் கொடுத்தார்.      

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com