ஆஷஸ் டெஸ்ட்: ஆஸ்திரேலியா அபார வெற்றி

ஆஷஸ் டெஸ்ட்: ஆஸ்திரேலியா அபார வெற்றி

ஆஷஸ் டெஸ்ட்: ஆஸ்திரேலியா அபார வெற்றி
Published on

ஆஸ்திரேலியா -இங்கிலாந்து அணிகள் மோதிய முதல் ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில், பத்து விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி பெற்றது.

ஆஸ்திரேலியா -இங்கிலாந்து இடையிலான ஆ‌ஷஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி பிரிஸ்பேனில் நடந்தது. ஆஸ்திரேலியாவுக்கு ராசியான இந்த மைதானத்தில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 302 ரன்கள் எடுத்தது. ஆஸ்திரேலியா 328 ரன்கள் எடுத்தது. இரண்டாவது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறியது. அந்த அணி இரண்டாவது இன்னிங்சில் 195 ரன்களில் சுருண்டது. ஆஸ்திரேலிய தரப்பில் ஸ்டார்க், ஹசில்வுட், நாதன் லயன் தலா 3 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதையடுத்து  நிர்ணயிக்கப்பட்ட 170 ரன்கள் இலக்கை நோக்கி இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர்கள் டேவிட் வார்னரும், கேமரூன் பான்கிராப்ட்டும் அபாரமாக ஆடி, விக்கெட் இழப்பின்றி இலக்கை எட்டினர். வார்னர் 87 ரன்களுடனும் பான்கிராப்ட் 82 ரன்களுடனும் களத்தில் இருந்தனர். 

இந்த வெற்றியின் மூலம் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா முன்னிலை வகிக்கிறது. 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com