\
இறப்பதற்கு 8 மணி நேரத்திற்கு முன்னதாக வார்னே எனக்கு மெசேஜ் செய்தார்: கலங்கும் கில்கிறிஸ்ட்

இறப்பதற்கு 8 மணி நேரத்திற்கு முன்னதாக வார்னே எனக்கு மெசேஜ் செய்தார்: கலங்கும் கில்கிறிஸ்ட்

இறப்பதற்கு 8 மணி நேரத்திற்கு முன்னதாக வார்னே எனக்கு மெசேஜ் செய்தார்: கலங்கும் கில்கிறிஸ்ட்
Published on: 

சர்வதேச கிரிக்கெட் களம் கடந்த 4-ஆம் தேதி அன்று மறைந்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷேன் வார்னேவின் நினைவில் மூழ்கியிருக்கிறது. இந்நிலையில் வார்னே உடன் ஆஸ்திரேலிய அணியில் இணைந்து விளையாடிய சக வீரரான ஆடம் கில்கிறிஸ்ட் ஒரு தகவலை தெரிவித்துள்ளார். 

“இறப்பதற்கு சுமார் எட்டு மணி நேரத்திற்கு முன்னதாக வார்னே எனக்கு மெசேஜ் செய்திருந்தார். அந்த மெசேஜில் மார்ச் 4 அன்று உயிரிழந்த முன்னாள் ஆஸ்திரேலிய வீரருக்கு செலுத்தப்பட்ட இறுதி அஞ்சலி குறித்து சொல்லியிருந்தார்” என தெரிவித்துள்ளார் கில்கிறிஸ்ட். 

மேலும் அந்த மெசேஜை ஒருபோதும் தான் டெலிட் செய்யப் போவதில்லை என்றும் கில்கிறிஸ்ட் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலிய அணிக்காக 145 டெஸ்ட், 194 ஒருநாள் போட்டிகளில் வார்னே விளையாடியுள்ளார். 52 வயதில் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்தார். 

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com