இந்தியா-ஆஸி பயிற்சி ஆட்டம்: ராகுல் & சூரியகுமார் அரைசதம்- ஆஸிக்கு 187 ரன்கள் இலக்கு

இந்தியா-ஆஸி பயிற்சி ஆட்டம்: ராகுல் & சூரியகுமார் அரைசதம்- ஆஸிக்கு 187 ரன்கள் இலக்கு
இந்தியா-ஆஸி பயிற்சி ஆட்டம்:  ராகுல் & சூரியகுமார் அரைசதம்- ஆஸிக்கு 187 ரன்கள் இலக்கு

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிற்கு 187 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்திய அணி.

உலககோப்பையின் உறுதிசெய்யப்படாத 4 இடத்திற்கான குரூப் ஸ்டேஜ் போட்டிகள் அக்டோபர் 16ஆம்  தேதி தொடங்கப்பட்டு அதில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் 4 அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு தகுதிபெறும். பின்னர் சூப்பர் 12 எனப்படும் உலககோப்பையின் அரையிறுதி இடங்களுக்கான போட்டிகள் 12 அணிகளுக்கிடையே அக்டோபர் 22ஆம் தேதி தொடங்கப்பட இருக்கிறது. மொத்தமாக 45 போட்டிகள் நடைபெற இருக்கின்றன.

உலககோப்பை குரூப் ஸ்டேஜ் தகுதிசுற்று மற்றும் சூப்பர் 12 போட்டிகளுக்கு முன்பு 15 பயிற்சி ஆட்டங்கள் ஆடப்படுகின்றன. குரூப் ஸ்டேஜ் அணிகளுக்குண்டான பயிற்சி ஆட்டங்கள் முடிவடைந்து உலககோப்பை போட்டிகள் நேற்றிலிருந்து தொடங்கப்பட்டு கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் 9ஆவது பயிற்சி ஆட்டம் இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே இன்று காலை தொடங்கப்பட்டு நடைபெற்று வருகிறது. முதலில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் பிஞ்ச் பந்துவீச்சை தேர்வு செய்தார். பின்னர் பேட்டிங் செய்ய களமிறங்கிய இந்திய அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் கேஎல் ராகுல் மற்றும் ரோகித் சர்மா இருவரும் நிதானமான ஆட்டத்தை தொடங்கினர். ரோகித் சர்மா ஸ்டிரைக் மட்டும் ரொட்டேட் செய்ய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார் கேஎல் ராகுல். 6 பவுண்டரிகள், 3 சிக்சர்கள் விளாசிய கேஎல் ராகுல் மேக்ஸ்வெல் வீசிய பந்தில் 33 பந்துகளில் 57 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். பின்னர் ரோகித் சர்மாவும் வெளியேற, அடுத்து வந்த விராட் கோலி 1 பவுண்டரி, 1 சிக்சர் என நல்ல தொடக்கத்தை கொடுத்தாலும் அவரும் ஸ்டார்க் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

அடுத்து களமிறங்கிய ஹர்திக் பாண்டியாவும் வெளியேற 5ஆவது விக்கெட்டுக்கு கைக்கோர்த்த சூரியகுமார் மற்றும் தினேஷ் கார்த்திக் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த இந்திய அணி இறுதியில் 186 ரன்கள் என்னும் நல்ல இலக்கை நிர்ணயித்துள்ளது. கடைசி ஓவர் வரை களத்தில் இருந்த சூரியகுமார் யாதவ் 6 பவுண்டரி, 1 சிக்சர் என விளாசி அரைசதம் கடந்து 33 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து கடைசி ஓவரில் பவுலரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

187 ரன்கள் என்னும் இலக்கை ஆஸ்திரேலியா அணி இரண்டாவது இன்னிங்ஸை தொடங்கி விளையாடி வருகிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com