உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு 3 மாத கால காத்திருப்பு ஏன்? - பிராட் ஹாக் கேள்வி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு 3 மாத கால காத்திருப்பு ஏன்? - பிராட் ஹாக் கேள்வி
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டிக்கு 3 மாத கால காத்திருப்பு ஏன்? - பிராட் ஹாக் கேள்வி

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் அட்டவணையை விமர்சிக்கும் வகையில், ஐசிசி விழித்தெழ வேண்டிய நேரம் இது என விமர்சித்திருக்கிறார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அகமதாபாத் டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டத்தில் மதிய உணவு இடைவேளையின் போதே இந்திய அணி, ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுவதை உறுதி செய்தது. இதற்கு காரணம் கிறைஸ்ட்சர்ச் நகரில் நடைபெற்று வந்த இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் நியூஸிலாந்து அணி 2 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதே காரணம். இதையடுத்து, வரும் ஜூன் மாதம் 7 முதல் 11-ம் தேதி வரை லண்டன் தி ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ள ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது இந்திய அணி.

இந்நிலையில் எதிர்வரும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் அட்டவணையை விமர்சிக்கும் வகையில், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விழித்தெழ வேண்டிய நேரம் இது என விமர்சித்திருக்கிறார் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக். “சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விழித்தெழ வேண்டிய நேரம் இது. நீங்கள் என்னதான் செய்து கொண்டு இருக்கிறீர்கள்? உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் பிரதான லீக் போட்டிகள் 2021 ஆகஸ்ட் முதல் 2023 மார்ச் வரைதான் நடைபெறுகிறது. பிறகு ஏன் இறுதிப் போட்டிக்கு மூன்று மாத கால காத்திருப்பு ஏன்? இதற்கான சுவாரஸ்யம், எதிர்பார்ப்பு என அனைத்தும் குறைந்து விடும்.

இடைப்பட்ட நேரத்தில் ஐபிஎல் கிரிக்கெட் நடைபெற உள்ளது. அதனால் ரசிகர்கள் மத்தியில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான ஆர்வம் மங்கிவிடும். மேலும், இந்தப் போட்டி இரு அணிகளுக்கும் பொதுவான மைதானங்களில் நடத்தப்படக் கூடாது. புள்ளிப்பட்டியலில் முதலிடம் பிடிக்கும் அணியின் சொந்த மண்ணில் போட்டிகள் நடத்தப்பட வேண்டும்” என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com