பத்தாவது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா, நாளை தொடங்குகிறது. தொடக்க விழா எட்டு நகரங்களில் நடக்க இருக்கிறது,
இந்தியாவின் ஐபிஎல் டி.20 கிரிக்கெட் தொடர், ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. பத்தாவது ஐபிஎல் திருவிழா நாளை தொடங்கி, மே 21-ம் தேதி வரை நடக்கிறது. இதில் மும்பை, பெங்களூர் உட்பட 8 அணிகள் பங்கேற்கின்றன. மொத்தம் 60 போட்டிகள் நடக்கின்றன.
ஐபிஎல் தொடக்க விழா, ஐதராபாத்தில் நாளை நடக்கிறது. மற்றும் புனேவில் 6ம் தேதியும் ராஜ்கோட்டில் 7-ம் தேதியும், இந்தூர் மற்றும் பெங்களூரில் 8-ம் தேதியும், மும்பை, கொல்கத்தா, டில்லி ஆகிய நகரங்களில் முறையே 9, 13, 15-ம் தேதிகளில் தொடக்க விழா நடக்க இருக்கிறது.
இந்த விழாக்களில் நடிகைகள் கேத்ரினா, அனுஷ்கா சர்மா, அலியா பட், ஷாருக் கான், சல்மான்கான் உட்பட பல பாலிவுட் நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர். சீனியர் கிரிக்கெட் வீரர்களான சச்சின், கங்குலி, டிராவிட், ஷேவாக் ஆகியோர் கவுரவிக்கப் பட இருக்கின்றனர்.