“தயவுசெய்து ஐபிஎல் போட்டிகளுக்கு விளையாட வராதீர்கள்” - டேவிட் வார்னரை கடுமையாக விமர்சித்த சேவாக்

தயவுசெய்து ஐபிஎல் போட்டிகளுக்கு விளையாட வர வேண்டாம் என்று டேவிட் வார்னரை விமர்சித்திருக்கிறார் சேவாக்.
David Warner
David Warner PTI

ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த ஆட்டத்தில் டெல்லி அணியை ராஜஸ்தான் 57 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. இதனால் டெல்லி அணி 3-வது தொடர் தோல்வியை சந்தித்தது. முதலில் ஆடிய ராஜஸ்தான் அணி ஜெய்ஸ்வால் மற்றும் பட்லர் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 199 ரன்கள் குவித்தது.

இதனைத் தொடர்ந்து 200 ரன்கள் வெற்றி என்ற பெரிய இலக்குடன் களம் இறங்கிய டெல்லி அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது.

David Warner
David Warner

முதல் ஓவரிலேயே பிரித்வி ஷா மற்றும் மனிஷ் பாண்டே ஆகியோரின் விக்கெட்டை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்தார் ராஜஸ்தான் அணியின் ட்ரெண்ட் போல்ட். அதன் பிறகு டெல்லி அணியால் மீண்டெழ முடியவில்லை. அந்த அணியின் கேப்டன் டேவிட் வார்னர் மட்டும் பொறுமையாக விளையாடி 55 பந்துகளில் 65 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். வார்னரின் இந்த ஆட்டம் ரசிகர்களை வெகுவாக சோதித்தது.

David Warner
RRvDC | எப்படி இருந்த டெல்லி இப்படி ஆகிடுச்சே..!

இதுகுறித்து பேசியிருக்கும் டெல்லி அணியின் முன்னாள் கேப்டனும் இந்திய அணியின் முன்னாள் வீரருமான வீரேந்திர ஷேவாக், டேவிட் வார்னரை காரசாரமாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக இணையதள நிகழ்ச்சியில் பேசியிருக்கும் அவர், “நான் ஆங்கிலத்தில் பேச வேண்டிய நேரம் வந்துவிட்டது. அப்போதுதான் நான் பேசுவது டேவிட் வார்னருக்கு புரியும்.

David Warner - Virender Sehwag
David Warner - Virender Sehwag

நீங்கள் 25 பந்துகளில் 50 ரன்கள் எடுக்க வேண்டும். ஜெய்ஸ்வால் போன்ற வீரர்களிடமிருந்து எவ்வாறு அதிரடியாக ஆட வேண்டும் என்று கற்றுக்கொள்ளுங்கள். அப்படி முடியவில்லை என்றால் தயவுசெய்து ஐபிஎல் போட்டிகளுக்கு விளையாட வர வேண்டாம்.

டேவிட் வார்னர் 30 ரன்களில் ஆட்டம் இழப்பது டெல்லி அணிக்கு நல்ல விஷயமே. ஏனெனில் அவர் 50 அல்லது 60 ரன்கள் எடுக்கும் போது பின்வரிசையில் வரும் அதிரடி ஆட்டக்காரர்களான ரோமன் பாவல் மற்றும் அபிஷேக் போரல் போன்ற வீரர்களுக்கு ஆடுவதற்கு போதுமான வாய்ப்பும் நேரமும் கிடைப்பதில்லை.

David Warner - Virender Sehwag
David Warner - Virender Sehwag

அவர்களைப் போன்ற அதிரடி ஆட்டக்காரர்கள் அதிக பந்துகளில் ஆட வேண்டும்'' என்றார் சேவாக்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com