டிவிட் சைஸில் ரெஸ்யூம்: விளையாட்டுப் பிள்ளையா இருக்காரே சேவாக்!
இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருப்பவர் கும்ப்ளேவின் பதவி காலம் தற்போது நடக்கும் சாம்பியன்ஸ் கோப்பை தொடருடன் முடிவடைகிறது.
இதனால் அந்த பதவிக்கு விண்ணப்பிக்குமாறு பிசிசிஐ அழைப்பு விடுத்திருந்தது. இதில் ஆஸ்திரேலியாவின் டாம் மூடி, இங்கிலாந்தின் பைபஸ், இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டோட்டா கணேஷ், முன்னாள் இந்திய ஏ அணியின் பயிற்சியாளர் லால்சந்த் ராஜ்புட் ஆகியோர் விண்ணப்பித்திருந்தனர். கூடவே இந்திய அணியின் அதிரடி பேட்ஸ்மேன் வீரேந்திர சேவாக்கும் விண்ணப்பித்திருந்தார்.
இவர் தனது விண்ணப்பத்தில் தன்னை பற்றி இரண்டே வரிகளில் அதாவது டிவிட் சைஸில் குறிப்பிட்டுள்ளார். இந்திய அணியில் தற்போதுள்ள வீரர்களுடன் தாம் முன்னர் விளையாடியுள்ளதையும், ஐபிஎல் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் பயிற்சியாளராக பணியாற்றியுள்ளதையும் மட்டுமே அவர் குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து விரிவான தகவல்களுடன் விண்ணப்பத்தை அனுப்புமாறு பிசிசிஐ, ஷேவாக்கை கேட்டுக்கொண்டுள்ளது.