இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக், டென்னிஸ் வீரர் ரோஜர் ஃபெடரர் பால் கறப்பது போன்ற புகைப்படத்தை தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் தொடர்ந்து 8 முறை பட்டம் வென்றவர் சுவிட்ஸர்லாந்தைச் சேர்ந்த ரோஜர் ஃபெடரர். இவர் கடந்த 2003 ஆம் ஆண்டு நடந்த சுவிஸ் ஓபன் டென்னிஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம் தனியார் நிறுவனம் ஒன்று ஃபெடரருக்கு ஜூலியட் என்ற பசுவை பரிசாக வழங்கியது. இதே போன்று, கடந்த 2013 ஆம் ஆண்டும் டிசைரி என்ற பசுவை பரிசாக பெற்றுள்ளார்.
தற்போது விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் பட்டம் வென்ற ரோஜருக்கு இதனை நினைவுபடுத்தும் விதமாக சேவாக், இந்த பழைய படங்களை பதிவிட்டு வீரேந்தர் சேவாக் நினைவு கூர்ந்துள்ளார். சுவிட்ஸர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் பசு மீது அன்பு கொண்டவர் என்றும், இந்தப் புகைப்படங்கள் பார்ப்பதற்கு அழகாக உள்ளன என்றும் சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.