பயிற்சியாளர் பதவி: ஷேவாக்குக்கு அதிக வாய்ப்பு
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவி, அதிரடி வீரர் வீர்ந்திர ஷேவாக்குக்கு கிடைக்க அதிக வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களில் 5 பேரைத் தேர்வு செய்து, சவுரவ் கங்குலி, சச்சின் டெண்டுல்கர் மற்றும் விவிஎஸ் லட்சுமணன் ஆகியோர் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனைக் குழு, மும்பையில் நேற்று நேர்காணல் நடத்தியது. ரவிசாஸ்திரி, டாம் மூடி, லால்சந்த் ரஜ்புத், ரிச்சர்ட் ஆகியோர் ஸ்கைப் மூலம் நேர்காணலில் பங்கேற்றனர். லண்டனில் இருக்கும் சச்சினும் ஸ்கைப் மூலம் கலந்துகொண்டார்.
வீரேந்திர ஷேவாக் நேரடியாக நேர்காணலில் கலந்துகொண்டார். சுமார் இரண்டு மணிநேரம் அவரிடம் நேர்காணல் நடந்தது. விராத் கோலி இந்தியா திரும்பிய பிறகு அவரிடம் ஆலோசனை நடத்திவிட்டு தலைமை பயிற்சியாளரை அறிவிக்க இருக்கின்றனர்.
இந்நிலையில் ரவிசாஸ்திரி, கோலியுடன் நெருக்கமாக இருக்கிறார் என்றும் அவருக்கே தலைமை பயிற்சியாளர் பதவி கிடைக்கும் என்று கூறப்பட்டது. ஆனால், வீரேந்திர ஷேவாக்கிற்கு அதிக வாய்ப்பிருப்பதாக இப்போது தெரியவந்துள்ளது