வார்னேவை தனது பாணியில் அசத்தலாக வாழ்த்திய ட்விட் மன்னன் சேவாக்
இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்தர் சேவாக், ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்துவீச்சாளர் ஷேன் வார்னேவுக்கு தனது பாணியில் அசத்தலாக பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வுபெற்ற அதிரடி மன்னன் சேவாக், தற்போது ட்விட்டரில் கலக்கி வருகிறார். ட்விட்டரில் இவரை பின் தொடரும் ரசிகர்களின் எண்ணிக்கை 1 கோடியை தாண்டியுள்ளது. இதற்கு காரணம் அவர் கேலியாக பதவிடும் கருத்துக்கள் அவ்வளவும் ரசிக்கும் படியாக இருக்கும் என்பதுதான்.
48-வது பிறந்தநாள் கொண்டாடும் ஷேன் வார்னேவுக்கு சேவாக் ட்விட்டரில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். தனது ட்விட்டர் வாழ்த்துச் செய்தியில், “நீங்கள் பந்துவீசும் போது உங்கள் கைகள் கட்டப்பட்டு இருக்க வேண்டும் என்று பேட்ஸ்மேன்கள் எப்பொழுதுமே விரும்பினார்கள். அந்த அளவிற்கு நீங்க பந்து வீசினீர்கள் அல்லது குறைந்தபட்சம் பேட்ஸ்மேன்களை எச்சரித்தீர்கள். லெஜெண்ட் ஷேன் வார்னேவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்று கூறியுள்ளார்.