விராட் கோலி ‘ரியல் போராளி’ - இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர்

விராட் கோலி ‘ரியல் போராளி’ - இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர்
விராட் கோலி ‘ரியல் போராளி’ - இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர்

விராட் கோலி உண்மையாகவே போரிடும் குணம் கொண்டவர் என இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் டன்கேன் ஃப்ளெட்ஜெர் தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணியின் தற்போதைய பயிற்சியாளராக இருப்பவர் ஃப்ளெட்ஜெர். இவர் இந்திய அணிக்கு 2011ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை பயிற்சியாளராக இருந்தார். இவர் பயிற்சியாளராக இருந்த காலகட்டத்தில் இந்திய அணி 8 தொடர்களை வென்றுள்ளது. இவரது காலகட்டத்தில் தான் கிரிக்கெட்டில் விராட் கோலி வேகமாக வளர்ந்தார். அப்போது தோனி இந்திய அணியின் கேப்டனாக இருந்தார்.

இந்நிலையில் தற்போது விராட் கோலி குறித்து ஒரு கருத்தை ஃபெளட்ஜெர் தெரிவித்துள்ளார். அந்த கருத்தை இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பகிர்ந்துள்ளார். அதில், “அந்த பையனை (விராட் கோலி) பாருங்கள். அவர் உண்மையாக போர்க் குணம் கொண்டவர். 2017 ஆம் ஆண்டு தோனியிடம் இருந்து கேப்டன்ஷிப் பொறுப்பை பெற்றார். இன்னும் அவரே நீடிக்கிறார்” என ப்ளெட்ஜெர் கூறியதாக தெரிவித்துள்ளார்.

மூன்று ரக கிரிக்கெட் போட்டிகளுக்கும் இந்திய அணி கேப்டனாக இருக்கும் விராட் கோலி, அனைத்து ரக போட்டிகளிலும் 50 ரன்களுக்கு மேல் ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ளார். டெஸ்ட் போட்டிகளில் 7,240 ரன்கள் குவித்துள்ள இவர் 53.30 ஸ்ட்ரைக் ரேட் கொண்டிருக்கிறார். மேலும், ஒருநாள் போட்டிகளில் 11,867 ரன்கள் குவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com