அனுஷ்கா ஷர்மாவுக்கு போட்டி: கோலியை மணக்க விரும்பிய பாக். போலீஸ்
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என பாகிஸ்தான் ஆண் போலீஸ் ஒருவர் பதாகையுடன் நின்ற காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான கிரிக்கெட் போட்டிகள் விறுவிறுப்பாக இருக்கும். ஒவ்வொரு அணியும் மற்ற அணியை பரஸ்பரம் பரம எதிரியாக கருதுவதால் விளையாட்டு என்பதையும் தாண்டி போட்டி அனல் பறக்கும். இரு அணி வீரர்களுக்கு இடையே மைதானங்களில் மோதல்கள் ஏற்படுவதும் வாடிக்கை. பாகிஸ்தான் வீரர்களை இந்திய ரசிகர்கள் ஆதரித்தால் அவர்களை தீவிரவாதிகள் போலவும், இந்திய வீரர்களை பாகிஸ்தான் ரசிகர்கள் ஆதரித்தால் அவர்களை அங்கு சமூக விரோதிகள் போலவும் கருதி வந்தனர். ஆனால் இந்த அணுகுமுறையில் தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானில் அந்நாட்டு வீரர்களை விட, தோனிக்கும், விராட் கோலிக்கும் ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர். கடந்த சில தினங்களுக்கு முன் பாகிஸ்தானில் நடைபெற்ற உலக லெவன் - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகளுக்கு இடையேயான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்றது. இந்தப்போடியில் இந்திய அணியைச் சேர்ந்த எந்த வீரரும் இடம்பெறவில்லை. கடைசிப்போட்டி கடாஃபி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாகிஸ்தான் காவலர் ஒருவர் விராட் கோலியை விரும்புவதாக ஒரு பதாகையை பிடித்திருந்தார். அதில் கோலியை திருமணம் செய்ய விரும்புவதாக தெரிவித்து இருந்தார்.
28 வயதான கோலி கிரிக்கெட்டில் பல சாதனைகளைக் குவித்து வருவதால் உலகம் முழுவதும் அவருக்கு ரசிகர்கள் அதிகரித்து வருகின்றனர். இந்நிலையில் அவரை காதலிப்பதாக பல்வேறு நாடுகளில் இருந்தும் பெண்கள் பல்வேறு வகையில் ப்ரபோஸ் செய்து வருகின்றனர். பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற இந்தப் போட்டியில், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் ஆப்ரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இலங்கை, இங்கிலாந்து ஆகிய நாடுகளை சேர்ந்த உலக லெவன் அணியில் இடம்பிடித்திருந்தனர். இந்திய வீரர்கள் இடம்பிடிக்காததால் ஏமாற்றமடைந்த பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் அந்த வருத்தத்தை பதாகைகள் மூலம் வெளிப்படுத்தினர். தோனி, கோலி விளையாடாதது வருத்தமளிப்பதாகவும், அவர்கள் இல்லாத கிரிக்கெட் போட்டி ரசிக்கும்படி இல்லை எனவும் வெளிப்படையாக பதாகைகளில் எழுதி வெளிப்படுத்தினர்.
இந்நிலையில்தான் இந்தப்போட்டியின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாகிஸ்தான் காவர் ஒருவர் கோலியை திருமணம் செய்ய விரும்புவதாக வாசகம் அடங்கிய பதாகையுடன் போஸ் கொடுத்துள்ளது இணையத்தில் வைரலாக வலம் வருகிறது. இனையடுத்து நெட்டிசன்கள் நடிகையும் விராட் கோலியின் காதலியுமான அனுஷ்கா சர்மாவுக்கு போட்டியாக பாகிஸ்தான் காவலர் கிளம்பியுள்ளதாக கமெண்ட் அடித்து வருகின்றனர்.