சர்வதேச கிரிகெட்டில், குறைந்த போட்டிகளில் 15 ஆயிரம் ரன்களைக் கடந்து இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி சாதனை படைத்துள்ளார். இலங்கை அணிக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 7 ரன்களைக் கடந்தபோது இந்த சாதனையை அவர் எட்டினார். 3 வகையான கிரிக்கெட்டிலும் சேர்த்து, 304ஆவது ஆட்டத்தில் கோலி, 15 ஆயிரம் ரன்களை எட்டியுள்ளார். தென்னாப்ரிக்க வீரர் ஹசிம் ஆம்லா, 336 போட்டிகளில் 15ஆயிரம் ரன்களைக் கடந்ததே சாதனையாக இருந்தது.
அதே போல டி20 போட்டியில் சேஸிங்கில் 1016 ரன்களை கடந்தும் அவர் சாதனை படைத்துள்ளார். இதற்கு முன் மெக்கல்லம் 1006 ரன்களை சேஸிங் மூலம் குவித்திருந்ததே சாதனையாக இருந்தது.